Home வணிகம்/தொழில் நுட்பம் 3 மாதங்களாக எண்ணெய் விலை உயர்ந்தால் மட்டுமே நடவடிக்கை: நிதியமைச்சு

3 மாதங்களாக எண்ணெய் விலை உயர்ந்தால் மட்டுமே நடவடிக்கை: நிதியமைச்சு

1047
0
SHARE
Ad

RON951கோலாலம்பூர் – தொடர்ச்சியாக  3 மாதங்களுக்கும் மேலாக, பெட்ரோல், டீசல் விலை  லிட்டருக்கு 2 ரிங்கிட் 50 காசுகளுக்கும் அதிகமாக விலையுயர்வு கண்டால் மட்டுமே அரசாங்கம் அது குறித்து பரிசீலனை செய்யும் என நிதியமைச்சு தெரிவித்திருக்கிறது.

அதிகரிக்கும் எண்ணெய் விலையால் மக்களுக்கு சுமை ஏற்படாமல் தடுக்க அரசாங்கம் அடுத்தக்கட்ட முறைகளைக் கையாளும் என்றும் நிதியமைச்சு குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த வாரம் வியாழக்கிழமை, எண்ணெய் விலை வழக்கத்திற்கு மாறாக மிக அதிக உயரத்தை அடைந்தது.

#TamilSchoolmychoice

ரோன் 95-ன் விலை லிட்டருக்கு 2.38 காசுகளும், ரோன் 97 விலை லிட்டருக்கு 2.66 காசுகளும் உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.