ஷா ஆலாம் – நேற்று ஞாயிற்றுக்கிழமை (26 நவம்பர் 2017) இங்குள்ள ஐடிசிசி (IDCC) மண்டபத்தில், சுமார் 2,000 பேர் கலந்து கொள்ள பிரம்மாண்டமான அளவில் நடைபெற்ற செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன்-கே.சந்திராதேவி தம்பதியர் புதல்வர் டாக்டர் தி.பழனீஸ்வரன், மற்றும் ச.தனபதி-கு.சரோஜினி தேவி தம்பதியரின் புதல்வி டாக்டர் த.நிஷா ஆகியோரின் திருமண விருந்துபசரிப்பு மலேசிய அரசியலில் எதிரணிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு முக்கியத் தலைவர்களை ஒரே இடத்தில், ஒரே மேசையில் இணைக்கும் வைபவமாகத் திகழ்ந்தது.

டாக்டர் பழனீஸ்வரன்-டாக்டர் நிஷா திருமணம், சனிக்கிழமை (25 நவம்பர் 2017) கோலசிலாங்கூரிலுள்ள ஓம்ஸ் தியாகராஜன் குடும்பத்தினரில் குல தெய்வக் கோயிலான அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து,அவர்களின் திருமண விருந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விருந்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தமிழ் மலர் பத்திரிக்கையின் நிறுவனரும், பல்வேறு இந்திய சமூக நற்பணிகளுக்கும், குறிப்பாக நாட்டில் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் நிறைய நன்கொடைகளை வழங்கி வருபவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன்.
நேற்றைய திருமண விருந்து நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தின்ஸ்ரீ வான் அசிசா, பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, ஜசெக துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, ஜசெக சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன், அமானா கட்சியின் பிரமுகரும், ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினருமான காலிட் சாமாட், கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ கோகிலன் பிள்ளை, மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் ஆகியோர் உட்பட பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

வழக்கமாக அரசியலில் எதிரணிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் பலரும் ஒரே இடத்தில் சங்கமித்ததும், ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் கலந்து உரையாடியதும், இந்தத் திருமண விருந்துபசரிப்பை வித்தியாசமான நிகழ்ச்சியாக விளங்கச் செய்தது.

விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று நன்றியுரையாற்றிய ஓம்ஸ் தியாகராஜன், “இங்கே மஇகா தலைவர்களும் வந்திருக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர்களும் வந்திருக்கின்றனர். இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் நான் ஆளும் கட்சியிலும் இல்லை, எதிர்க் கட்சியிலும் இல்லை என்பதுதான்” எனக் கூறினார்.
விருந்து நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ க.குமரன் வாழ்த்துரை வழங்கினார். கோபிந்த் சிங் டியோவும் வாழ்த்துரை வழங்கி உரையாற்றினார். மணமகளின் தந்தையார் தனபதியும், மணமகள் குடும்பத்தினர் சார்பாக உரையாற்றினார்.

மணமக்களுடன் ஓம்ஸ் தியாகராஜன் தம்பதியர், மணமகளின் பெற்றோர் தனபதி தம்பதியர், டாக்டர் சுப்ரா தம்பதியர், தேவமணி…