Home வணிகம்/தொழில் நுட்பம் எரிமலை வெடிப்பு: பாலி, லொம்பாக் விமான நிலையங்கள் மூடல்!

எரிமலை வெடிப்பு: பாலி, லொம்பாக் விமான நிலையங்கள் மூடல்!

1237
0
SHARE
Ad

Mount Agung volcanoகோலாலம்பூர் – இந்தோனிசியாவில் மௌண்ட் அகுங் எரிமலை வெடித்துக் கொண்டிருப்பதால், பாலி, லொம்பாக் ஆகிய நகரங்களில் அமைந்திருக்கும் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து இன்று திங்கட்கிழமை சாங்கி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டிருக்கும் தகவலில், “மௌண்ட் அகுங் எரிமலை வெடிப்பு காரணமாக, பாலி, லொம்பாக் விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அடுத்த அறிவிப்புகள் வரும் வரை அவை மூடப்பட்டிருக்கும்”

“பயணிகள் சாங்கி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான (changiairport.com)-ஐ வலம் வந்து இது குறித்த அடுத்தக்கட்டத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ரைட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், எரிமலை வெடிப்பினால் ஏற்பட்டிருக்கும் சாம்பலும், புகையும் 6,000 மீட்டர்களுக்கும் மேல் வானில் பரவியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
மலேசியாவின் மலிவுக்கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா எரிமலை வெடிப்பு காரணமாகத் தனது 32 விமானங்களை நிறுத்தியிருக்கிறது. அதேபோல் மலேசியா ஏர்லைன்ஸ் தனது கோலாலம்பூருக்கும், டென்பசார் -பாலி இடையிலான அனைத்து விமானங்களையும் இன்று முதல் நிறுத்தியிருக்கிறது.
#TamilSchoolmychoice

கடந்த 1963-ம் ஆண்டு மௌண்ட் அகுங் எரிமலை வெடித்ததில், அப்பகுதியைச் சேர்ந்த 1,000 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.