Home நாடு சீனப் பெருநாளுக்குப் பிறகு பொதுத்தேர்தல் – சாஹிட் கூறுகிறார்!

சீனப் பெருநாளுக்குப் பிறகு பொதுத்தேர்தல் – சாஹிட் கூறுகிறார்!

877
0
SHARE
Ad

ahmad-zahid-hamidiபாகன் டத்தோ – சீனப் பெருநாளுக்குப் பிறகு பொதுத்தேர்தல் வரப்போவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

“மறக்காதீர்கள்.. நமது பெருநாள், சீனப் பெருநாளுக்குப் பிறகு வரப்போகிறது. வாக்காளர்கள் இதற்கு முன்பு தவறு செய்திருந்தால், பரவாவில்லை. அதை நான் மறந்துவிடுகிறேன். முடிந்தால் மீண்டும் ஒருமுறை அந்தத் தவறைச் செய்யாதீர்கள்” என்று சாஹிட் தெரிவித்திருப்பதாக பெர்மானா கூறுகின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹூத்தான் மெலிந்தாங்கில் உள்ள தியோ பூ கியாங் வழிபாட்டுத்தளத்தைத் திறந்து வைத்த சாஹிட் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice