Home இந்தியா ‘ஜெயலலிதா மகள்’ என்று கூறி பெங்களூர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு!

‘ஜெயலலிதா மகள்’ என்று கூறி பெங்களூர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு!

1129
0
SHARE
Ad

jayalalithaaபெங்களூர் – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி, காலமானார்.

இந்நிலையில், இன்னும் சில தினங்களில் ஜெயலலிதா மறைந்து ஓர் ஆண்டு நிறைவு பெறவிருக்கும் நிலையில், பெங்களூர் உச்சநீதிமன்றத்தில் அம்ருதா என்ற பெண், தான் ஜெயலலிதாவின் மகள் என்றும், தன்னை அவரது மகளாக அறிவிக்கக் கோரியும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அம்மனுவில் தனக்கு மரபனு சோதனை நடத்தும் படியும், மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து அவரது மரபணுவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் படியும் அப்பெண் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதால் தான் இத்தனை நாட்கள் தான் இந்த உண்மையை மறைத்து வைத்திருந்ததாகவும் அம்ருதா குறிப்பிட்டிருக்கிறார்.