நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், கோபாலகிருஷ்ணன் ஆகியோரே அந்த மூவராவர். இந்த மூவரும் இன்று திங்கட்கிழமை மாலை முதலமைச்சர் பழனிசாமியின் இல்லம் வந்து அவரைச் சந்தித்தனர்.
சசிகலாவின் மிக நெருக்கமான ஆதரவாளரான நவநீத கிருஷ்ணன் ஒரு வழக்கறிஞர் என்பதோடு, மாநிலங்களவையில் அதிமுக அணியின் தலைவராகவும் விளங்கியவர்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த அணி மாற்றம் தினகரனுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Comments