அந்த “சித்தர்கள் காட்டிய வாழ்வு நெறி” குறித்த சிறப்பு ஆன்மீக, இலக்கியக் சொற்பொழிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3 டிசம்பர் 2017-ஆம் நாள் இரவு 7.00 மணிக்கு, கிள்ளான், எம்பிகே மண்டபத்தில் உள்ள இ-நூலகத்தில் (e-library) நடைபெறும்.
முனைவர் இளமதி சானகிராமன் இந்த சொற்பொழிவை வழங்குகிறார். இவர் புதுவையிலுள்ள புதுவைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராவார்.
முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவு கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் சுகுமாறன் சுந்தரம் ஆதரவில் நடைபெறுகிறது. மலேசிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக அறப்பணி இயக்கம், மற்றும் கிள்ளான் விண்வெளி கலைமன்றம் ஆகிய இயக்கங்கள் இந்த சிறப்பு சொற்பொழிவை ஏற்பாடு செய்துள்ளன.
016-3272392; 019-2716552; 019-3619235; 016-3949265