Home Video சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ – குறு முன்னோட்டம் வெளியீடு!

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ – குறு முன்னோட்டம் வெளியீடு!

1140
0
SHARE
Ad
thana serntha koottam-surya-vignesh sivan-keerthi suresh
தானா சேர்ந்த கூட்டம் – படப் பிடிப்பில் கீர்த்தி சுரேஷ், விக்னேஷ் சிவன், சூர்யா..

சென்னை – அடுத்தாண்டு பொங்கல் திருநாளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் குறுமுன்னோட்டம் (டீசர்) நேற்று வியாழக்கிழமை நவம்பர் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தானா சேர்ந்த கூட்டம் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice

‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெளியிடப்பட்ட ஒரே நாளில் 4.2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது இந்த 1 நிமிடம் 14 வினாடிகளைக் கொண்ட முன்னோட்டம்.

ஏற்கனவே, ‘சொடக்கு போடுது’ என்ற பாடல் வெளியிடப்பட்டது யூடியூப் தளங்களிலும், தமிழகத்தின் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் பரவலாகப் பிரபலமாகியுள்ளது.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.