Home 13வது பொதுத் தேர்தல் தே.மு.வின் கோட்டை புத்ரா ஜெயாவை தற்காக்கத் தயார்! – தெங்கு அட்னான்

தே.மு.வின் கோட்டை புத்ரா ஜெயாவை தற்காக்கத் தயார்! – தெங்கு அட்னான்

774
0
SHARE
Ad

thengku-adnanபுத்ரா ஜெயா, மார்ச் 26- “புத்ராஜெயாவை தோற்றுவிப்பது வீண் செலவு என்று  அதற்காக பல எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் இப்பொழுது எதிர்கட்சியினர் புத்ரா ஜெயாவை அடைய பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர்” என்று புத்ரா ஜெயாவின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக தெங்கு அட்னான் கூறியுள்ளார்.

“புத்ரா ஜெயாவை மத்திய அரசாங்க நிர்வாக மையமாக அமைப்பதை பிடிக்காத பாஸ் கட்சி  கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. பாஸ் கட்சி மற்ற எதிர்கட்சிகளான ஜனநாயக செயல் கட்சியுடனும் பிகேஆர் கட்சியுடனும் கூட்டு வைத்து சதிச் செய்து புத்ரா ஜேயாவை வீழ்த்தி தேசிய முன்னணியிடமிருந்து கைப்பற்ற எண்ணுகிறது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

டத்தோஸ்ரீ தெங்கு அட்னான்  தெங்கு மன்சோர் அம்னோவின் பொதுச் செயலாளர் ஆவர். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் புத்ரா ஜெயாவின் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், கடந்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியில் போட்டியிட்ட முகமட் நோர் முகமட்டை எதிர்த்து  2,734 என்ற வாக்கு வித்தியாசத்தில் தெங்கு அட்னான் வெற்றிபெற்றார். அண்மையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்,  எதிர்வரும் பொதுத் தேர்தலில் புத்ரா ஜெயா நாடாளுமன்ற தொகுதியில் தெங்கு அட்னான்போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

“என்னை புத்ரா ஜெயா நாடாளுமன்றத்தில் வேட்பாளாராக நிறுத்திய பிரதமரின் அறிவிப்பை மதிக்கின்றேன். தேசிய முன்னணியின் தலைவராகிய பிரதமரின் வேட்பாளர்  தேர்வும், வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களின் தேர்வும் பிரதமரின் முடிவாகும்” என்று தெங்கு அட்னான் கூறினார்.

“ எந்த எதிர்கட்சியுடனும் நான் போட்டியிட தயாராக இருக்கிறேன். காரணம் என்னுடைய ஒரே குறிக்கோள் மக்களுக்கு சேவை செய்வதும், அதே சமயம் புத்ரா ஜெயாவை முன்னேற்றம் மிக்க மத்திய அரசாங்க நிர்வாக மையகா மாற்றி அமைப்பதும் ஆகும்.” என்று தெங்கு அட்னான்  செய்தியாளர்களிடம் கூறினார்.

புத்ரா ஜெயா தொகுதியில் தெங்கு அட்னானை எதிர்த்து பாஸ் கட்சியின் கவர்ச்சிகரமான உதவித் தலைவரான கிளந்தானைச் சேர்ந்த ஹூசாம் நிற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.