கேலாங் பாத்தா, மார்ச் 26 – மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது அதனுடன் சேர்த்து பக்காத்தான் கூட்டணி ஆட்சி செய்கின்ற மாநிலங்களின் சட்டமன்றங்களும் ஒரே நேரத்தில் கலைக்கப்படும் என்று ஜ.செ.க கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
அதன்படி பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணி ஆட்சி செய்யும் சிலாங்கூர் மாநிலத்தின் சட்டமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் தேதி இயல்பாகவே கலைந்துவிடும்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 27ஆம் தேதி கிளந்தான் மாநில சட்டமன்றம் தனது தவணைக் காலம் முடிந்து இயல்பாகவே கலைந்து விடும்.
இன்று நடைபெறும் மக்கள் கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது மக்கள் கூட்டணி ஆட்சி செய்கின்ற மாநிலங்களின் சட்டமன்றங்களும் கலைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை தான் செய்யப் போவதாகவும் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
13வது பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போகும் கேலாங் பாத்தா தொகுதியிலுள்ள ஜசெக கட்சியின் தேர்தல் நடவடிக்கை அறையைத் திறந்து வைத்த பின் லிம் கிட் சியாங் இந்த தகவலை வெளியிட்டார்.