அவ்வாறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் மற்றும் நாம் பார்த்து மகிழ்ந்த பட்டிமன்ற நிகழ்ச்சியை நேரில் கண்டு மகிழ உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்புக் காத்து கொண்டிருக்கின்றது.
“திரைப்பட பாடல்கள் நல்வாழ்விற்கு வழிகாட்டுகிறதா? வழிமாற்றுகிறதா?” என்ற தலைப்பை மையப்படுத்தி இப்பாட்டுமன்றம் அமையவிருக்கிறது. லியோனி தலைமையில் நடக்கவிருக்கும் இப்பாட்டுமன்றத்தில் நமது ராகா வானொலி அறிவிப்பாளர் மாறன், அறிவிப்பாளர் குமரேஷ் மற்றும் மீனாக்குமாரியும் கலந்துக் கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இந்திகழ்ச்சிக்கு நுழைவு முற்றிலும் இலவசமாகும்.