Home உலகம் ஹேரிக்கும், மேக்ஹான் மார்க்லேவுக்கும் மே 19-ல் திருமணம்!

ஹேரிக்கும், மேக்ஹான் மார்க்லேவுக்கும் மே 19-ல் திருமணம்!

1034
0
SHARE
Ad

Harry-Meghanலண்டன் – பிரிட்டன் இளவரசர் ஹேரிக்கும், அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மேக்ஹான் மார்க்லேவுக்கும், வரும் மே 19-ம் தேதி, சனிக்கிழமை திருமணம் நடைபெறவிருப்பதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்திருக்கிறது.

விண்ட்சர் கேஸ்டிலில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் சேப்பெலில் அவர்களது திருமணம் நடைபெறும் என்றும் அரண்மை குறிப்பிட்டிருக்கிறது.

மேற்கு லண்டனில் அமைந்திருக்கும் வின்ஸ்சரில் தான் தங்களது திருமணம் நடக்க வேண்டும் என ஹேரியும், மார்க்லேவும் விரும்பியதாகவும், அது அவர்களுக்கு சிறப்பு வாய்ந்த இடம் என்றும் அரண்மனை தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இத்திருமணத்தில் ஹேரியின் பாட்டியான 91 வயது ராணி எலிசபெத் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.