Home இந்தியா குளிப்பதை எட்டிப் பார்த்ததாக தமிழக ஆளுநர் மீது பெண் புகார்!

குளிப்பதை எட்டிப் பார்த்ததாக தமிழக ஆளுநர் மீது பெண் புகார்!

1084
0
SHARE
Ad

BanwarilalPurohitசென்னை – தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் புதிதாகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கோவை வண்டிப்பாளையத்தில் கடந்த சில நாட்களாக சுகாதார முறைகளை தானே நேரடியாக ஆய்வு செய்து வந்தார் பன்வாரிலால்.

அப்போது, பெண் ஒருவர் கீற்று மறைப்பில் குளித்துக் கொண்டிருக்க ஆளுநர் அதனை விலக்கிப் பார்த்ததாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, அப்பெண், தான் குளிப்பதை ஆளுநர் பார்த்துவிட்டதாகக் கூறவே, அந்த பகுதிவாசிகள் ஆளுநரைச் சுற்றி வளைத்திருக்கின்றனர்.

எனினும், பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.