Home உலகம் நஜிப் இலங்கை வருகை – டாக்டர் சுப்ரா உடன் செல்கிறார்!

நஜிப் இலங்கை வருகை – டாக்டர் சுப்ரா உடன் செல்கிறார்!

1206
0
SHARE
Ad

najib-sri lanka-17122017கொழும்பு -பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான 3 நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொள்கிறார்.

அவருடன் செல்லும் அரசாங்கக் குழுவில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியமும் இடம் பெற்றுள்ளார்.

டாக்டர் சுப்ரா இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்பு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

#TamilSchoolmychoice

najib-sri lanka-1-17122017பிரதமர் நஜிப் தனது பாஹ்ரேன் வருகையை முடித்துக் கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைத் தலைநகர் கொழும்பு வந்தடைந்தார்.

இலங்கை வருகையை முடித்துக் கொண்டு நஜிப் மாலைத் தீவுகளுக்கும் வருகை புரிகிறார்.