Home இந்தியா பெரிய பாண்டியன் மரணம் – நதுராம் மனைவி கைது

பெரிய பாண்டியன் மரணம் – நதுராம் மனைவி கைது

1143
0
SHARE
Ad

Periya pandiசென்னை – ராஜஸ்தானில் வடநாட்டுக் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற தமிழகக் காவல் துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, நடைபெற்ற விசாரணையில் சக காவல் துறை அதிகாரி முனிசேகர் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டுதான் பெரிய பாண்டியனின் உயிரைப் பறித்தது என்ற தகவல் வெளியிடப்பட்டதை அடுத்து தமிழகக் காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் தேடப்பட்ட முக்கியக் குற்றவாளியான நதுராமின் மனைவி மஞ்சு ராஜஸ்தான் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே சம்பவம் தொடர்பில் நதுராமின் கூட்டாளியான செங்கல் சூளை உரிமையாளர் தேஜாராம், அவரது மனைவி மற்றும் மகளை ஏற்கனவே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் சுட்டுக் கொல்லப்பட்ட பெரிய பாண்டியனும், அவருடன் சென்ற மற்றொரு காவல் துறை ஆய்வாளரான (இன்ஸ்பெக்டர்) முனிசேகரும் நெருங்கிய நண்பர்கள் எனத்  காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

பெரிய பாண்டியன் மரணம் குறித்து முறையான முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை நிலவரம் அறிவிக்கப்பட வேண்டும் என பெரிய பாண்டியனின் மனைவி பானுரேகா கோரிக்கை விடுத்துள்ளார்.