Home நாடு ஜோகூர் பெட்ரோல் பங்கில் 30 வயது ஆடவர் கொடூரக் கொலை!

ஜோகூர் பெட்ரோல் பங்கில் 30 வயது ஆடவர் கொடூரக் கொலை!

1276
0
SHARE
Ad

Crime-Pixஜோகூர் பாரு – நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் ஜோகூர் பாருவில் உள்ள தாமான் பிளாங்கி என்ற இடத்தில் உள்ள எண்ணெய் நிரப்பும் மையம் (பெட்ரோல் பங்க்) ஒன்றில், பொதுமக்கள் முன்னிலையில் 30 வயது ஆடவர் மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

தனது காரின் சக்கரங்களில் காற்று நிரப்பிக் கொண்டிருந்த அவரை, பிஎம்டபிள்யூ வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் செல்ல முயன்றனர்.

ஆனால் அவர் போராடித் தப்பிக்க முயற்சி செய்யவே, அவரைப் பலமுறை கத்தியால் குத்தியதோடு, சிறிய அளவிலான வெடிபொருள் ஒன்றையும் அவர் மீது வீசி வெடிக்கச் செய்து, காரை ஏற்றியும் கொலை செய்தனர்.

#TamilSchoolmychoice

பொதுமக்கள் முன்னிலையில், நடந்த இக்கொலையை ஒருவர் தனது செல்பேசியில் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார்.

இறந்த நபரின் காரில் இருந்த 20 வயதான அவரது காதலி, அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டு கெஞ்சியிருக்கிறார்.

தற்போது இக்கொலைச் சம்பவம் குறித்து ஜோகூர் பாரு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

இறந்தவரின் அடையாளங்களை காவல்துறை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.