பெரியபாண்டியனைச் சுட்டது சக காவல்துறை அதிகாரியான முனிசேகர் தான் என்றும், துப்பாக்கிச் சண்டையின் போது தவறுதலாக அவரது துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் இறந்திருப்பதாகவும் ராஜஸ்தான் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
முதலில், பெரிய பாண்டியனை கொள்ளையன் நாதுராம் சுட்டதாகச் சொல்லப்பட்டது. அதன் பின்னர் வந்த தகவலில் ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி இருட்டில் எங்கோ விழுந்து விட்டதை எடுத்து கொள்ளையர்கள் பெரிய பாண்டியனைச் சுட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், முனிசேகரே தவறுதலாக பெரிய பாண்டியனைச் சுட்டுவிட்டதாக ராஜஸ்தான் காவல்துறை கூறுகின்றது.
Comments