Home இந்தியா ராஜஸ்தானில் கொள்ளையர்கள் சுட்டதில் தமிழக போலீஸ் அதிகாரி பலி!

ராஜஸ்தானில் கொள்ளையர்கள் சுட்டதில் தமிழக போலீஸ் அதிகாரி பலி!

817
0
SHARE
Ad

Periya pandiசென்னை – நகைக்கடைக் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தேடப்பட்டு வந்த கொள்ளை கும்பல் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, மதுரவாயல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது.

அங்கு ராஜஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு தமிழகக் காவல்துறையினர் சென்றனர்.

ஆனால், கொள்ளையர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில், இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி குண்டடிபட்டு உயிரிழந்தார்.

#TamilSchoolmychoice

முனிசேகர் தோள்பட்டையில் தோட்டா துளைக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

பெரிய பாண்டியின் மரணம் தமிழகக் காவல்துறையினரை மிகவும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

தற்போது அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற காவல்துறையின் முக்கியத் தலைவர்கள், பெரிய பாண்டியின் வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர்.