Home உலகம் ஜெருசேலம் விவகாரம்: பாலஸ்தீன அதிபர் விடுத்திருக்கும் எச்சரிக்கை!

ஜெருசேலம் விவகாரம்: பாலஸ்தீன அதிபர் விடுத்திருக்கும் எச்சரிக்கை!

887
0
SHARE
Ad

mahmud-abbasஇஸ்தான்புல் – ஜெருசேலம் நகரம் பாலஸ்தீனத் தலைநகராகவே நீடிக்கும் என்றும், அவ்வாறு நடப்பதில் சிக்கல் ஏற்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்ற நிலை நீடிக்கும் என்றும் பாலஸ்தீன அதிபர் மாஹ்முத் அப்பாஸ் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

கடந்த 1967-ம் ஆண்டு நடந்த மத்தியக் கிழக்குப் போரின் போது ஜெருசேலம் நகரை இஸ்ரேல் கைப்பற்றி தன்னுடன் வைத்து வந்தது.

ஜெருசேலம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டதாகவே இத்தனை ஆண்டுகளாகக் கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் 6-ம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜெருசேலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போராட்டங்கள் வெடித்து தற்போது லட்சக்கணக்கானோர் அமெரிக்க அதிபருக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

மேற்கு ஆசிய நாடுகளான துருக்கி, ஜோர்டான், பாகிஸ்தான், மலேசியா, இந்தொனிசியா ஆகிய நாடுகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் இன்று புதன்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு அவசர மாநாட்டில் பேசிய பாலஸ்தீன அதிபர் மாஹ்மூத் அப்பாஸ், ஜெருசேலம் நகரம் பாலஸ்தீனத்தின் தலைநகராகவே தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவித்தார்.

அவ்வாறு இல்லையென்றால், மத்திய கிழக்கில் மேலும் பிரச்சினைகள் வெடிக்கும் என்றும் மாஹ்முத் எச்சரிக்கை விடுத்தார்.