Home இந்தியா குஜராத் – இமாசலப் பிரதேசம் தேர்தல் – மீண்டும் உயிர்த்தெழுந்தது காங்கிரஸ்

குஜராத் – இமாசலப் பிரதேசம் தேர்தல் – மீண்டும் உயிர்த்தெழுந்தது காங்கிரஸ்

869
0
SHARE
Ad

BJP-ultra-new-+-bigபுதுடில்லி – குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசம் இரண்டு மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சி அமைத்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே பாஜகவுக்குக் கடும் போட்டியை இந்த முறை காங்கிரஸ் வழங்கியிருக்கிறது.

இந்த மாற்றம் இந்திய அரசியல் அரங்கில் சில அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதோடு, 2019-இல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீதான நம்பகத் தன்மையை அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்த இரண்டு மாநிலங்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள மாநிலங்களில் 19 மாநிலங்களில் தற்போது பாஜக தனது ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

மலேசிய நேரப்படி இரவு 7.30 மணியளவிலான தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-

குஜராத் (மொத்த தொகுதிகள் 182)

பாஜக                                        100

காங்கிரஸ் கூட்டணி              79

மற்றவை                                     3

 

இமாசல பிரதேசம் (மொத்த தொகுதிகள் 68)

பாஜக                         44

காங்கிரஸ்                21

மற்றவை                    3