Home வணிகம்/தொழில் நுட்பம் நடிகையுடனான திருமணம் பற்றி வாய் திறக்க மறுத்த பிரபல நிறுவனர்!

நடிகையுடனான திருமணம் பற்றி வாய் திறக்க மறுத்த பிரபல நிறுவனர்!

1214
0
SHARE
Ad

Air-Asia-கோலாலம்பூர் – ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கொரியாவைச் சேர்ந்த நடிகை குலோவை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அண்மையில் டோனி ஸ்டார்பிஸ் செய்திக்கு நேர்காணல் அளித்தார். அதில் திருமணம் குறித்து ஸ்டார்பிஸ் தொகுப்பாளர் ஜுனைரா சாயீத் எழுப்பியக் கேள்விக்குப் பதிலளித்த டோனி, முதன் முதலாக குலோவை ஒரு உணவகத்தில் சந்தித்ததாகவும், அப்போது அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும் டோனி தெரிவித்தார்.

Tonyமேலும், இதைத் தவிர திருமணம் பற்றிய மற்ற விவரங்களை தான் கூற விரும்பவில்லை என்றும், தனது மறைவுக்குப் பின்னால் தனது வாழ்க்கைப் பற்றிய நூலில் மட்டுமே அது இடம்பெறும் என்றும் டோனி தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே திருமணமானவரான பெர்னாண்டசுக்கு முதல் திருமணத்தின் மூலம் பிறந்த இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.