Home கலை உலகம் ரசிகரின் இறுதிச்சடங்கில் கதறி அழுத கார்த்தி!

ரசிகரின் இறுதிச்சடங்கில் கதறி அழுத கார்த்தி!

1160
0
SHARE
Ad

Karthiசென்னை – கார் விபத்தில் இறந்த தனது ரசிகர் ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற நடிகர் கார்த்தி, துக்கம் தாங்காமல் கதறி அழுதிருக்கிறார்.

திருவண்ணாமலை கார்த்தி ரசிகர் மன்றம் மற்றும் நல்வாழ்வு அமைப்பின் தலைவரான ஜீவன்குமார் அவரது நண்பர்கள் இருவரும் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்குக் காரில் சென்று கொண்டிருந்த போது நடந்த விபத்தில் ஜீவன் குமார் மரணமடைந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஜீவன்குமாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட கார்த்தி, கதறி அழுததோடு, இனி இரவு நேரங்களில் தொலை தூரப்பயணங்களைச் செய்ய வேண்டாமெனத் தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார்.