Home நாடு 2017 உலக சம்பவங்கள்: மின்னல் வானொலியில் இரா.முத்தரசன் தொகுத்து வழங்குகிறார்!

2017 உலக சம்பவங்கள்: மின்னல் வானொலியில் இரா.முத்தரசன் தொகுத்து வழங்குகிறார்!

1064
0
SHARE
Ad
Mutharasan-book launch-
இரா.முத்தரசன்

கோலாலம்பூர் – நம்மைக் கடந்து போகும் 2017-ஆம் ஆண்டில் நடந்த முக்கிய சம்பவங்களை மின்னல் எப்.எம். (பண்பலை) வானொலி தினமும் ‘காலைக் கதிர்’ நிகழ்ச்சியில் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை தொகுத்து வழங்கி வருகிறது.

அந்த வரிசையில் நாளை வியாழக்கிழமை டிசம்பர் 28-ஆம் தேதி காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை இடம் பெறும் காலைக் கதிர் நிகழ்ச்சியில் 2017-ஆம் ஆண்டில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் குறித்த தொகுப்பை மின்னல் அறிவிப்பாளர்கள் தெய்வீகன், மற்றும் ஹரி ஆகிய இருவரும் வழங்குகின்றனர்.

minnal-fm-logoஅவர்களோடு செல்லியலின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் இணைந்து தனது பார்வையில் 2017-ஆம் ஆண்டின் முக்கிய உலக சம்பவங்கள் குறித்தும், உலக மக்களிடையேயும், மற்ற நாடுகளிலும் அந்த சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கங்களையும் விளக்குவார்.

#TamilSchoolmychoice

அதே வேளையில் பிறக்கின்ற புத்தாண்டில் உலக அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சம்பவங்கள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.