
ஷா ஆலாம் – நேற்று சனிக்கிழமை (30 டிசம்பர் 2017) இங்கு நடைபெற்ற பிரிபூமி பெர்சாத்து கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் துன் மகாதீர், தனது தலைமைத்துவத்தில் நிகழ்ந்த கடந்த காலத் தவறுகளுக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
மன்னிப்பு கோரி உரையாற்றியபோது கண்கலங்கிய மகாதீர், ஒரு மனிதன் தவறு செய்ததாக மற்றவர்கள் நினைத்தால், அதற்காக மன்னிப்பு கேட்பதுதான் மலாய் கலாச்சாரம் என்பதால்தான் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் மகாதீர் விளக்கமளித்துள்ளார்.