Home கலை உலகம் ஆன்மீக அரசியல் என்றால் என்ன? – ரஜினி விளக்கம்!

ஆன்மீக அரசியல் என்றால் என்ன? – ரஜினி விளக்கம்!

944
0
SHARE
Ad

rajini-announcement-politics-31122017சென்னை – தனிக்கட்சி தொடங்கி தான் அரசியலுக்கு வரப் போவதை நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதிலும் குறிப்பாக, ஆன்மீக அரசியலை முன்னெடுப்போம் என ரஜினி கூறியிருந்தது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியிருந்தது.

இந்நிலையில், அவரிடம் ஆன்மீக அரசியல் என்றால் என்ன? என இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

#TamilSchoolmychoice

அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், “ஆன்மீக அரசியல் என்பது உண்மையான, நேர்மையான, நாணயமான ஜாதிமத சார்பற்ற அறப்பற்று கொண்ட அரசியலுக்கு பெயர்தான் ஆன்மிக அரசியல்” என்று விளக்கமளித்தார்.