Home வணிகம்/தொழில் நுட்பம் அஸ்ட்ரோவின் 11 வானொலி சின்னங்கள் புத்துருவாக்கம் கண்டன

அஸ்ட்ரோவின் 11 வானொலி சின்னங்கள் புத்துருவாக்கம் கண்டன

1144
0
SHARE
Ad

astro-radio-brandsகோலாலம்பூர் – வானொலி கேட்பது ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி, மக்கள் மத்தியில் ஒரு முக்கிய அம்சமாகவும் ஊடகமாகவும் திகழ்கின்றது. அதே வேளையில், பண்பலை அல்லது எப். எம் பயன்பாட்டு குறைந்து கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, வானொலி ஒலிபரப்புகளில் காணொளி உள்ளடக்கங்கள், சமூக ஊடகங்கள், செய்தி, போக்குவரத்து நிலவரங்கள், போட்காஸ்ட் எனப்படும் ஒலிப்பதிவு ஆவணப் பதிவுகள், திரைப்பட விமர்சனங்கள், நேரடி கலைநிகழ்ச்சிகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

அந்த வகையில், அஸ்ட்ரோ வானொலி ஒலிபரப்புகள் தங்களுடைய ரசிகர்களை இசை வாயிலாகவும் பல்வேறு தளங்களிலும் இணைத்து நாட்டின் முன்னிலை வானொலி நிலையங்களாகத் திகழ்கின்றன.

#TamilSchoolmychoice

இரசிகர்களுக்குத் தொடர்ந்து தரமான புதுமையான உள்ளடக்கங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அஸ்ட்ரோ வானொலியின் 11 வானொலி நிலையங்களின் வணிக சின்ன முத்திரைகள், பெயர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 2-ஆம் தேதி தொடக்கம் ஏரா, மை, ஹிட்ஸ், மிஸ்க், லைட், சினார், ராகா, கேகார், மெலோடி, ஜயான் மற்றும் கோஷுவென் வானொலி நிலையங்களில் பண்பலை அல்லது எப். எம் பயன்படுத்தப்படாது.

அஸ்ட்ரோ வானொலியின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜேக் அப்துல்லா இது குறித்துக் கூறும்போது “கடந்து வந்த இத்தனை ஆண்டுகளில் எங்கள் ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க சமூக ஊடகம் ஒரு சிறந்த தளமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் எங்களின் உள்ளடகங்களை அதிகமான ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க சமூக ஊடகத் தளங்கள் பெரிதும் துணைப்புரிகின்றன” என்றார்.

“தற்போது, அஸ்ட்ரோ வானொலி 16.3 மில்லியன் ரசிகர்களை சமூக ஊடகங்களில் கொண்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் வானொலி உருமாற்றங்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் ‘Watch Radio’ என்ற தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டுமே, எங்களின் 11 வானொலி நிலையங்களின் காணொளிகளை 619.8 மில்லியன் இரசிகர்கள் கண்டு களித்துள்ளார்கள்”, என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் முன்னணி தமிழ் வானொலியாக விளங்கும் டி.எச்.ஆர் ராகாவின் டி.எச்.ஆர் எனும் பெயர் தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ராகா வானொலியின் சின்னமும் புதுப்பிக்கப்பட்டது.