Home கலை உலகம் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ரஜினி, கமல்!

ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ரஜினி, கமல்!

1098
0
SHARE
Ad

Natchathira Vizha2கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க நட்சத்திர விழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக ரஜினி, கமலின் வருகை அமைந்திருந்தது.

நேற்றே ரஜினி மலேசியா வந்துவிட்ட நிலையில், இன்று காலை தொடங்கி கமல் எப்போது வருவார்? வருகிறாரா? இல்லையா? என்ற கேள்விக் குறிகள் ரசிகர்கள் மனதில் எழுந்திருந்தது.

இந்நிலையில், ரஜினியும், கமலும் ஒரே ஹெலிகாப்டரில் அரங்கிற்கு வந்திறங்கி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தனர்.

#TamilSchoolmychoice

Natchathira Vizha3வெள்ளை நிற குர்தாவில் கமலும், கருப்பு நிற ஜிப்பாவில் ரஜினியும் மிக அழகாக உடையணிந்திருந்தனர்.

இருவரும் அரங்கிற்கு வந்திறங்கியதும், அங்கிருந்த சுமார் 50,000 -த்திற்கும் அதிகமான ரசிகர்கள் உரக்கக் கத்தி உற்சாக வரவேற்பளித்தனர்.