Home கலை உலகம் நடிகர் சங்கத்திற்கு சரவணா ஸ்டோர்ஸ் 2.5 கோடி ரூபாய் நன்கொடை!

நடிகர் சங்கத்திற்கு சரவணா ஸ்டோர்ஸ் 2.5 கோடி ரூபாய் நன்கொடை!

1046
0
SHARE
Ad

Natchathira Vizha1கோலாலம்பூர் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்ற பிரம்மாண்ட நட்சத்திர விழா 2018 மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிகப் பிரம்மாண்டமான முறையில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்தக் கலை நிகழ்ச்சிக்கு  சென்னை சரவணா ஸ்டோர்ஸ் முதன்மை விளம்பரதாரராக செயல்பட்டது.

இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் எஸ்.எஸ்.சரவணன், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இரண்டு கோடியே 50 லட்ச ரூபாய் நன்கொடைக்கான காசோலையை அளித்தார்.

#TamilSchoolmychoice

அதனை ரஜினியும், கமலும் மேடையில் பெற்றுக் கொண்டனர்.