Home கலை உலகம் ராகா வானொலிக்கு சாதனைத் தமிழ் நிறுவன விருது!

ராகா வானொலிக்கு சாதனைத் தமிழ் நிறுவன விருது!

970
0
SHARE
Ad

Raagaசென்னை – கடந்த ஜனவரி 5-ம் தேதி சென்னையில் நடைபெற்ற 4-வது உலக தமிழர் திருநாள் விழாவில் ராகா வானொலி நிலையத்திற்கு ‘சாதனைத் தமிழ் நிறுவனம்’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு குழந்தை பிரிஷா சந்திரன் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு, ராகாவில் இடம்பெறும் ஹைப்பர் மாலை நிகழ்ச்சியில் ‘ஏதோ எங்களால் முடிஞ்சது’ அங்கத்தில் பொது மக்களிடம் நன்கொடை பெற்று உதவிய ராகாவிற்கு இந்த விருதை உலக தமிழ் வம்சாவளி அமைப்பு வழங்கியது. இவ்விருதை ராகாவின் சார்பில் அறிவிப்பாளர் ராம் பெற்று கொண்டார்.

பிரிஷாவுக்கு கல்லீரலில் கோளாறு இருப்பதை அறிந்த பிரிஷாவின் தயார் கிருஷ்ணவேணி, தன்னுடைய குழந்தையின் உயிரை காப்பாற்ற பலரிடம் உதவிகளை நாடினார். ராகாவில் இடம்பெற்ற நேர்காணலுக்குப் பிறகு, பல பேர் முன் வந்து உதவி செய்தார்கள். குழந்தையின் பிரிஷாவின் அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

பிரிஷாவின் அறுவை சிகிச்சைக்கு உதவி அனைத்து நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்விருது சமர்பாணமாகும்.

‘ஏதோ எங்களால் முடிஞ்சது’ நிகழ்ச்சியின் வாயிலாக உதவிகள் தேவைப்படும் குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களை வானொலிக்கு அழைத்து நேர்காணல் செய்து மக்களிடமிருந்து உதவிகளைப் பெற்று தந்துள்ளார்கள்.