Home நாடு பிரதமர் வேட்பாளராக மகாதீர் தேர்வு: கர்பால் சிங்கின் மகள் கவலை!

பிரதமர் வேட்பாளராக மகாதீர் தேர்வு: கர்பால் சிங்கின் மகள் கவலை!

1251
0
SHARE
Ad

Sangeet Kaur Deoகோலாலம்பூர் – வரும் 14-வது பொதுத்தேர்தலில், எதிர்கட்சியின் பிரதமர் வேட்பாளராக, துன் டாக்டர் மகாதீர் முகமது தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து மறைந்த ஜசெக முன்னாள் தலைவர் கர்பார் சிங்கின் மகள் சங்கீத் கவுர் டியோ தனது சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.

22 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த டாக்டர் மகாதீர் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, எதிர்கட்சியில் தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் பற்றாக்குறையைக் காட்டுகிறது என்றும் சங்கீத் கவலை தெரிவித்திருக்கிறார்.

“அவர் மீண்டும் பிரதமர் ஆவார். மகாதீரிசத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவார்” என சங்கீத் இணையதளம் ஒன்றிற்கு அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், “அண்மையில் நடைபெற்ற பெர்சாத்து பொதுக்கூட்டத்தில் மகாதீர் மன்னிப்புக் கேட்ட போது, எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் அமைதி காத்தனர். அப்படியானால், 14-வது பொதுத்தேர்தலில் எதிர்கட்சி வெற்றியடைந்த பின்னரும் இப்படி தான் அமைதியாக இருக்கப் போகிறார்களா?” என்றும் சங்கீத் கேள்வி எழுப்பியிருக்கிறார்.