Home கலை உலகம் ஒரே நாளில் 3 முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியீடு: வசூலை அள்ளப்போவது யார்?

ஒரே நாளில் 3 முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியீடு: வசூலை அள்ளப்போவது யார்?

1486
0
SHARE
Ad

surya-vs-vikram-on-pongal-race-கோலாலம்பூர் – வரும் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் திருநாளை முன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை விக்ரம் நடித்திருக்கும் ‘ஸ்கெட்ச்’, சூர்யா நடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’, பிரபுதேவா நடித்திருக்கும், ‘குலேபகாவலி’ ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன.

இதனையடுத்து, சினிமா ரசிகர்கள் மத்தியில் உற்சாகமும், பரபரப்பும் கூடியிருக்கிறது.

விக்ரம், தமன்னா நடித்திருக்கும் ‘ஸ்கெட்ச்’ திரைப்படத்தை விஜய பாஸ்கர் இயக்கியிருக்கிறார். சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தை விக்னேஸ் சிவன் இயக்கியிருக்கிறார். பிரபுதேவா, ஹன்சிகா நடித்திருக்கும், ‘குலேபகாவலி’ திரைப்படத்தை கல்யாண் இயக்கியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இம்மூன்று திரைப்படங்களும் இன்று வெளியாகவிருக்கும் நிலையில், மக்கள் மனதை வென்று வசூலை அள்ளப் போகும் படம் எது? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

செல்லியலில் இம்மூன்று திரைப்படங்களின் விமர்சனங்களையும் அடுத்தடுத்து படிக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள செல்லியல் செயலியை இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்:

https://selliyal.com/app/index_others.php