Home நாடு “பிரதமர் மட்டும் குற்றவாளி அன்வாரைச் சந்தித்தது ஏன்?” – சுரேந்திரன் கேள்வி

“பிரதமர் மட்டும் குற்றவாளி அன்வாரைச் சந்தித்தது ஏன்?” – சுரேந்திரன் கேள்வி

1078
0
SHARE
Ad
Surendran-padang serai MP
என்.சுரேந்திரன்

கோலாலம்பூர் – செராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை புதன்கிழமை (10 ஜனவரி 2018) சந்திக்கச் சென்ற மகாதீருக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் துணை உள்துறை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகமட் வெளியிட்டிருக்கும் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் அன்வாரின் வழக்கறிஞரான என்.சுரேந்திரன்.

அன்வாரைக் குற்றவாளி என வர்ணித்திருக்கும் நூர் ஜஸ்லானுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் சுரேந்திரன் “அன்வார் குற்றவாளி என்றால் ஒரு குற்றவாளியை பிரதமர் நஜிப் மட்டும் ஏன் சென்று சந்தித்தார்?” என்றும் சுரேந்திரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Mahathir
புதன்கிழமை அன்வாரைச் சந்திக்கச் சென்ற மகாதீருக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது – அருகில் அன்வாரின் மகள் நூருல் இசா

கடந்த நவம்பரில் தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட அன்வார், மருத்துவமனையில் தங்கியிருந்தபோது, பிரதமர் நஜிப்பும் துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடியும் தனித்தனியே சென்று அன்வாரைச் சந்தித்தனர்.

#TamilSchoolmychoice

“மகாதீர் அன்வாரைச் சந்திப்பதைக் கண்டு அம்னோ எவ்வளவு தூரம் பயப்படுகிறது என்பதையே நூர் ஜஸ்லானின் அறிக்கை காட்டுகிறது” என்றும் சுரேந்திரன் கூறியிருக்கிறார்.

“அன்வாரைக் குற்றவாளி என அம்னோ காட்ட முற்படுவதன் மூலம் ஓர் அரசியல் எதிரியான அவர் மீது அம்னோ எவ்வளவு தூரம் அச்சம் கொண்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது” என்றும் சுரேந்திரன் கூறியிருக்கிறார்.