Home இந்தியா தமிழகம்: போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

தமிழகம்: போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

910
0
SHARE
Ad

tamil nadu-buses-file picசென்னை – தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலையுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

தமிழக அரசு வழங்கிய ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்ப போக்குவரத்து ஊழியர்கள் முன்வந்ததைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து சென்னையிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பேருந்துகள் கட்டம் கட்டமாக இயங்கத் தொடங்கின.