Home நாடு பொதுத்தேர்தலில் நான் போட்டியிட இயலாத நிலை ஏற்படலாம்: குவான் எங்

பொதுத்தேர்தலில் நான் போட்டியிட இயலாத நிலை ஏற்படலாம்: குவான் எங்

1102
0
SHARE
Ad

Lim_Guan_ENg_1010_sபினாங்கு – தன் மீதான ஊழல் வழக்கு விசாரணை மே மாதம் வரையில் நீடிப்பதால், அது தனக்கு 14-வது பொதுத்தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு அதனால் போட்டியிட முடியாமல் போகலாம் என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்திருக்கிறார்.

பினாங்கு உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் புதன்கிழமை லிம் குவான் எங் மற்றும் தொழிலதிபர் பாங் லி கூன் ஆகிய இருவரின் மீதான் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை,மார்ச் 26 முதல் 30-ம் தேதி வரையிலும், ஏப்ரல் 9 முதல் 12-ம் தேதி வரையிலும், மே 7 முதல் 10-ம் தேதி வரையிலும் மற்றும் மே 21 முதல் 25-ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவித்தது.

அரசாங்கத் துணை வழக்கறிஞர் டத்தோ மேஸ்ரி முகமது தாவுத், லிம் மற்றும் பாங் மீதான குற்றச்சாட்டுகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 2015-ம் ஆண்டு, பங்களா ஒன்று வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி லிம் குவான் எங் மற்றும் பெண் தொழிலதிபர் பாங் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.