Home உலகம் கொலம்பியாவில் பாலம் சரிந்து விழுந்து 10 பேர் பலி!

கொலம்பியாவில் பாலம் சரிந்து விழுந்து 10 பேர் பலி!

1136
0
SHARE
Ad

Colombia bridge collapseபோகோடா – மத்திய கொலம்பியாவில் கட்டுமானப் பணியில் இருந்த பெரிய பாலம் ஒன்று சரிந்து விழுந்ததில் 10 கட்டுமானத் தொழிலாளர்கள் பலியாகினர்.

நேற்று திங்கட்கிழமை நடந்த இச்சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்திருப்பதோடு, மேலும் இருவரைக் காணவில்லை.

பாலம் சரிந்து விழுந்த நேரத்தில் அதன் மேல் 20 தொழிலாளர்கள் இருந்தனர் என்றும், அவர்கள் அனைவரும் 280 மீட்டர் உயரத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்தனர் என்றும் உள்நாட்டுத் தற்காப்புத் துறை இயக்குநர் ஜார்ஜ் டியாஸ் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice