Home நாடு அடுத்த மாதம் முதல் நாடெங்கிலும் சுற்றுப் பயணம் – மகாதீர் அறிவிப்பு!

அடுத்த மாதம் முதல் நாடெங்கிலும் சுற்றுப் பயணம் – மகாதீர் அறிவிப்பு!

988
0
SHARE
Ad

mahathir_Wan-Azizah__comboகோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு,  அடுத்த மாதம் தொடங்கி பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், துணைப் பிரதமர் வேட்பாளர் டத்தின்ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் நாடெங்கிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.

வாரங்களின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களிலும் சாலையோரப் பிரச்சாரங்கள் நடைபெறும் என மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

“ஒருவேளை மே மாதம் தேர்தல் வருவதாக நமக்கு இன்னும் 14 வாரங்கள் தான் இருக்கின்றன” என்று பெட்டாலிங் ஜெயாவில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் செய்தியாளர்களிடம் மகாதீர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

 

Comments