கோலாலம்பூர் – கெவின் மொராயிஸ் கொலை வழக்கில், எதிர்தரப்பு விசாரணை இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் துவங்கியது.
ஆனால், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இருவரின் வழக்கறிஞர்கள் இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டதையடுத்து, விசாரணை நாளை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆர்.தினேஸ்வரனின் வழக்கறிஞரான சுவா லி லியும், ஏ.கே.தினேஸ் குமாரின் வழக்கறிஞரான எம்.மனோகரனும் தாங்கள் இவ்வழக்கில் இருந்து வாபஸ் பெறுவதாக கூறியதை ஏற்ற நீதிபதி அஸ்மான் அப்துல்லா விசாரணையை நாளை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட தங்களது கட்சிக்காரர்கள் இருவரின் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வராததால், தாங்கள் வாபஸ் பெற்றுக் கொள்வதாக சுவா லி லியும், எம்.மனோகரனும் தெரிவித்திருக்கின்றனர்.