Home கலை உலகம் சூர்யாவைக் கிண்டலடித்த சன்மியூசிக்: ரசிகர்கள் போராட்டம்!

சூர்யாவைக் கிண்டலடித்த சன்மியூசிக்: ரசிகர்கள் போராட்டம்!

970
0
SHARE
Ad

Surya Fans protestசென்னை – பிரபல சன்மியூசிக் அலைவரிசையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இரு தொகுப்பாளினிகள், சூர்யாவின் உயரத்தை அமிதாப் பச்சனோடு ஒப்பிட்டுக் கிண்டலடித்து சர்ச்சையில் சிக்கியிருக்கின்றனர்.

கோலிவுட் டைம்ஸ் என்ற ஊடகம் அது குறித்து முதல் கண்டனத்தை பதிவு செய்ததையடுத்து, சன்மியூசிக்குக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால் உட்பட சினிமா வட்டாரங்களைச் சேர்ந்த பலரும் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தொகுப்பாளினிகளின் கிண்டலைக் கண்டித்து சன் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் இன்று சனிக்கிழமை போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice