Home கலை உலகம் அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ‘பொங்கு தமிழ்’ விழா!

அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ‘பொங்கு தமிழ்’ விழா!

837
0
SHARE
Ad

Astro Ponggu Tamilகோலாலம்பூர் – கடந்த ஜனவரி 7-ம் தேதி ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெற்ற ‘பொங்கு தமிழ்’ விழா அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-ல் ஒளியேறவிருக்கிறது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, வீர விளையாட்டு மற்றும் சிலம்பம் போட்டிகள் இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும். அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியில் மக்கள் செல்வம் நடிகர் விஜய் சேதுபதி, அருண் பாண்டியன், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருக்கின்றனர்.

பொங்கு தமிழ் கலை நிகழ்ச்சியில் உள்ளூர் பாடகர் ரூபன் ராஜ், பாடகி டர்ஷனி, தமிழகத்திலிருந்து பிண்ணனி பாடகர் அந்தோணி தாசன், அவரின் துணைவியர் ரீத்தா அந்தோணி தாசன் ஆகியோரின் படைப்புகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறவிருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும், சிலம்பாட்டம், கரகாட்டம், புலி ஆட்டம், மயிலாட்டம், காளையாட்டம், பொய்க்கால் குதிரை என 15-க்கும் அதிகமான கிராமியக் கலைகளையும் இந்நிகழ்ச்சியில் கண்டு களிக்கலாம்.

ஜனவரி 21-ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் அஸ்ட்ரோ கோவில் இந்நிகழ்ச்சியை காணத் தவறாதீர்கள்.