Home நாடு மலேசியா வாழ் இந்தியத் தமிழர்கள் சங்க ஏற்பாட்டில் பொங்கல் விழா!

மலேசியா வாழ் இந்தியத் தமிழர்கள் சங்க ஏற்பாட்டில் பொங்கல் விழா!

1381
0
SHARE
Ad

Pongalகோலாலம்பூர் – மலேசியா வாழ் இந்தியத் தமிழர்கள் சங்கத்தின் பொங்கல் விழா இன்று சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் தொடங்கி இரவு 7 மணி வரை, பிரிக்பீல்ட்ஸ் எஸ்எம்கே லா சாலே பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில், மலேசியாவில் வாழும் 500-க்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த தொழில் முறை வல்லுநர்களும், முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக விழா ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த செ.ராஜா கண்ணன் தனது பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், இவ்விழாவில், முக்கிய நிகழ்ச்சிகளாக தமிழர் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், கோலப்போட்டி, ஆடம்பர / பாரம்பரிய உடை அணிதல், சமையல் போட்டி, கபடி போட்டி, உரி அடித்தல் போட்டி, சிலம்பம், கும்மி அடித்தல், குழந்தைகளுக்கான ஒப்புவித்தல், நடனப் போட்டி போன்ற பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்றும் ராஜா கண்ணன் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice