Home நாடு சிகாமாட்: ஊர்கூடி வைத்த ஒற்றுமைப் பொங்கல்

சிகாமாட்: ஊர்கூடி வைத்த ஒற்றுமைப் பொங்கல்

1296
0
SHARE
Ad

segamat-ponggal-19012018 (2)சிகாமட்- இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டங்கள் நாடெங்கிலும் பல்வேறு விதமான போட்டிகள், நிகழ்ச்சிகள் என சிறப்பு அம்சங்களோடு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மஇகா தலைமையகத்திலும் கட்சியின் சார்பாக, மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத்துடன் இணைந்து ‘ஒற்றுமைப் பொங்கல்’ என்ற கருப்பொருளில் பொங்கல் கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உண்மையிலேயே ஒற்றுமைப் பொங்கல் என்பதை உணர்த்தும் விதமாக, உணர்வு பூர்வமான முறையில் கடந்த வெள்ளிக்கிழமை (20 ஜனவரி 2018) சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் ‘பொங்கல் ஊர்வலப் பண்பாட்டு விழா 2018’ என்ற வித்தியாசமான பொங்கல் கொண்டாட்டம்  வெற்றிகரமாக நடந்தேறியது.

segamat-ponggal-19012018 (3)சிகாமாட், கிம்மாஸ் பாரு, தாமான் பிந்தாங் வீடமைப்புப் பகுதியில் ம இ கா தேசியத் தலைவரும், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தனது துணைவியார் டத்தின்ஸ்ரீ உமாராணியுடன் வீடு வீடாக தனது குழுவினருடன் ஊர்வலமாகச் சென்று மக்களை நலம் விசாரித்ததோடு, ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு கைப்பிடி அரிசியைப் பெற்று இறுதியில் அனைத்து வீடுகளில் இருந்தும் பெறப்பட்ட ஊர்மக்களின் அரிசியைக் கொண்டு ஒற்றுமையோடு ஒரே பொங்கல் வைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

segamat-ponggal-19012018 (4)இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆடை அலங்காரம், சேலை அலங்காரம், கிராமிய நடனம், கோலம், உறி அடித்தல், சரம் பின்னுதல், கரும்பு சாப்பிடுதல், தோரணம் பின்னுதல், இல்ல அலங்கரிப்பு என பல போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் அதிர்ஷ்டக் குலுக்கும் நடத்தப்பட்டு பலருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சுப்ரா “இன்று நாம் வைத்திருப்பது ஒற்றுமைப் பொங்கல். நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் அரசாங்கத்திடமிருந்து மேலும் பலவற்றை பெற முடியும்” என குறிப்பிட்டார்.

seg-ponggal-(10)-19012018இந்த ஊர்வலப் பண்பாட்டு பொங்கல் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிகாமாட் தொகுதியில் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“மலேசியாவிலுள்ள 2.1 மில்லியன் இந்தியர்களை அரசாங்கத்தில் பிரதிநிதிக்கும் இந்தியத் தலைவரை, மஇகாவின் தேசியத் தலைவரை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்திருக்கும் கௌரவமும் பொறுப்பும் சிகாமாட் வாக்காளர்களுக்கு அதிலும் இங்குள்ள இந்திய வாக்காளர்களுக்கு அமைந்திருக்கிறது. அதற்கான நான் எனது நன்றியை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என டாக்டர் சுப்ரா தனதுரையில் மேலும் குறிப்பிட்டார்.

seg-ponggal-(9)-19012018“நாட்டின் அடுத்தப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதில் போட்டியிடவிருக்கும் ம இ கா வேட்பாளர்களுக்கு இந்திய சமூகம் பிளவுப்படாத முழுமையான ஆரதவை வழங்க வேண்டும். அவர்கள் வெற்றிப் பெற்றால்தான் அவர்களால் இந்திய சமூகத்திற்கு நிறைவான நல்ல பல காரியங்களைச் செய்ய இயலும்” எனவும் தனதுரையில் டாக்டர் சுப்ரா நினைவுபடுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ம இ கா தலைவர்கள், பொது மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

seg-ponggal-(22)-19012018seg-ponggal-(15)-19012018