Home நாடு சிகாமாட்டில் வித்தியாசமான பொங்கல் ஊர்வலப் பண்பாட்டு விழா

சிகாமாட்டில் வித்தியாசமான பொங்கல் ஊர்வலப் பண்பாட்டு விழா

1279
0
SHARE
Ad

segamat-ponggal-banner-சிகாமாட் – ஜனவரி 14-ஆம் தேதி முதற்கொண்டு பொங்கல் திருநாள் நாடு முழுமையிலுமுள்ள இந்தியர்களால் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் நாளை வெள்ளிக்கிழமை (19 ஜனவரி 2018) சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் சிகாமாட்டில் நடைபெறும் பொங்கல் ஊர்வலப் பண்பாட்டு விழா இரண்டாம் ஆண்டாக வித்தியாசமாக – மிக விமரிசையாக நடைபெறவிருக்கின்றது.

கடந்த ஆண்டும் இதே போன்று வித்தியாசமான முறையில் சிகாமாட்டில் பொங்கல் ஊர்வலப் பண்பாட்டு விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

subra-ponggal-segamat-2017
2017-ஆம் ஆண்டில் சிகாமாட்டில் பொங்கல் பண்பாட்டு விழா கரகாட்ட ஊர்வலத்துடன் நடத்தப்பட்ட போது…
#TamilSchoolmychoice

முழுக்க முழுக்க தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு அடிப்படையில் நடைபெறும் இவ்விழா நாளை மாலை 4.00 மணி அளவில் கோலாகல ஊர்வலத்துடன் தொடங்குகிறது. மஇகா தேசியத் தலைவருமான டாக்டர் சுப்ரா மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம் என நாதஸ்வர மேளத்தாளத்துடன் அப்பகுதியில் இருக்கக்கூடிய இந்தியக் குடும்பங்கள் வீட்டிற்கு ஊர்வலமாக வலம் வருவார். ஊர்வலத்தின் போது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பிடி அளவு அரிசி டாக்டர் சுப்ராவிடம் வழங்கப்படும்.

ஏறக்குறைய 2 மணி நேரம் நீடிக்கும் ஊர்வலத்திற்குப் பின் ஏறக்குறைய மாலை 6.00 மணி அளவில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வழங்கப்பட்ட அரிசியைக் கொண்டு ஓரிடத்தில் ஒரே பொங்கலாக வைக்கப்படும். மேலும், கரும்பு சாப்பிடுதல், இல்ல அலங்கரிப்பு, உறி அடித்தல், தோரணம் பின்னுதல், சரம் பின்னுதல், கோலப் போட்டி என தமிழர்களின் பண்பாட்டு மரபுகளைக் கட்டிக் காக்கும் வகையில் பல்வேறு போட்டி விளையாட்டுகளும்  நடைபெறும்.

புதுமையான சிந்தனையிலும், வட்டார இந்தியர்களை ஒற்றுமைப்படுத்தும் விதமாகவும், தமிழர்களின் கலை கலாச்சார பண்பாட்டு அடிப்படையிலும் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு வட்டார பொதுமக்கள் மட்டுமின்றி அதன் சுற்று வட்டாரத்தினரும் திரளாகக் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்போடு கேட்டுக் கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சி குறித்து மேல் விவரங்கள் பெறவும் போட்டி விளையாட்டுகளில் பங்கு பெறவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குமாரி சீதா – 0167477845

ஷான் – 0197307564

பிரதாப் – 0183651700