Home இந்தியா அக்னி – 5 அணு ஆயுத ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகப் பாய்ச்சியது

அக்னி – 5 அணு ஆயுத ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகப் பாய்ச்சியது

893
0
SHARE
Ad
agni-5-launched-18012018
அக்னி -5 விண்ணில் பாய்ந்த காட்சி

புதுடில்லி – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் சக்தி வாய்ந்த – தரையிலுள்ள இலக்கை நோக்கி 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் பாயும் ஏவுகணை ஒன்றை இந்தியா இன்று வியாழக்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்ததாக இந்திப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அக்னி 5 என்ற பெயர்கொண்ட அந்த ஏவுகணை அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. இந்திய நேரப்படி இன்று காலை 9.53 மணியளவில் ஒடிசா மாநிலக் கடற்கரையோரத்திலிருக்கும் அப்துல் கலாம் தற்காப்பு பரிசோதனை மையத்திலிருந்து இந்த ஏவுகணை விண்ணில் பாய்ந்தது.

அக்னி – 5 பாய்ச்சப்பட்டதை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உறுதிப்படுத்தினார். இந்தப் பரிசோதனை முழுமையான வெற்றி என்றும் அவர் வர்ணித்தார்.

#TamilSchoolmychoice

மிகவும் நுணுக்கமான தொழில் நுட்பத்தைக் கொண்ட அக்னி – 5 ஏவுகணை 19 நிமிடங்கள் பறந்து சென்று, அந்த நேரத்திற்குள் சுமார் 4,900 கிலோ மீட்டரைக் கடந்தது.

சுமார் 17 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை 50 டன்னுக்கும் கூடுதலான எடை கொண்டதாகும்.