Home Video “பத்மாவதி” திரைப்படம் தமிழிலும் வெளியாகிறது

“பத்மாவதி” திரைப்படம் தமிழிலும் வெளியாகிறது

1776
0
SHARE
Ad

padmavati-movie-stillபுதுடில்லி – புகழ் பெற்ற இந்திப் பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘பத்மாவதி’ பல்வேறு சர்ச்சைகள் – தாமதங்களுக்குப் பின்னர் இந்தியாவில் வெளியிடப்பட உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இன்னும் சில பகுதிகளில் எதிர்ப்புகள் காட்டப்பட்டாலும், அடுத்த வாரம் ஜனவரி 25 முதல் ‘பத்மாவதி’ திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்மாவதி திரைப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் தமிழ் முன்னோட்டம் கடந்த சில நாட்களாக கோலாலம்பூரிலுள்ள திரையரங்குகளில் தமிழ்ப்படங்களுக்கு முன்பாக காட்டப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

‘பத்மாவத்’ எனப் பெயர்மாற்றம் கண்டுள்ள இந்தப் படத்தின் தமிழ் வடிவம் மலேசியாவிலும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பத்மாவத்’ திரைப்படத்தின் தமிழ் வடிவ முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: