தைப்பிங் – பேராக் மாநில ஜசெக தலைவரும், தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினருமான இங்கா கோர் மிங்கின் ஆயர் தாவார் இல்லமும், அவரது தைப்பிங் நாடாளுமன்ற சேவை மையமும் நேற்று வியாழக்கிழமை மாலை மலேசிய தொடர்பு மற்றும் பல்ஊடக ஆணையத்தின் அதிகாரிகளால் அதிரடியாகச் சோதனையிடப்பட்டது.
கோர் மிங்கின் சமூக ஊடகப் பதிவுகளின் காரணமாக அவர் தொடர்பான இடங்கள் சோதனையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அவரது செல்பேசியும், கணினியும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
கோர் மிங்கின் சமூக ஊடகப் பதிவுகள் தேசிய முன்னணி அரசாங்கத்தை சாடுவதாகக் காரணம் காட்டி இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில், நேற்றிரவு ஈப்போவிலுள்ள சுங்கை செனாம் காவல் நிலையத்தில் தன்மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் குறித்து கோர் மிங் வாக்கு மூலத்தை வழங்கினார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.
சமூக ஊடகத்தில் தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி வேறு யாரோ தவறுதலாக சில பதிவுகளைச் செய்திருக்கிறார்கள் என்றும் கோர் மிங் கூறியுள்ளார்.
தொலைத் தொடர்பு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கோர் மிங் விசாரிக்கப்படுகிறார்.