டாவோஸ் – சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர நேற்று திங்கட்கிழமை சுவிட்சர்லாந்து சென்றடைந்தார்.
பின்னர் அவர் சுவிட்சர்லாந்து அதிபர் அலெய்ன் பெர்செட்டுடன் சந்திப்பு நடத்தினார்.
இன்று செவ்வாய்க்கிழமை டாவோஸ் மாநாட்டில் மோடி உரையாற்றுகிறார்.
21 ஆண்டுகளில் டாவோஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் ஒருவர் கலந்து கொள்ளப் போகிறார் என்பதாலும், மோடியின் முதல் டாவோஸ் வருகை இது என்பதாலும், டாவோசில் பல இந்திய அடையாளம் கொண்ட கலாச்சார, பண்பாட்டு அம்சங்கள் காணப்படுகின்றன என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய உணவகங்கள், பாரம்பரிய பொருட்களின் காட்சி, போன்றவை ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, மோடியுடன் வரும் இரண்டு யோகா ஆசிரியர்கள், பனிசூழ்ந்த டாவோஸ் மலைப் பிரதேசத்தில் யோகா பயிற்சி வகுப்புகளையும் நடத்தவிருக்கின்றனர்.