Home இந்தியா இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் நஜிப்! டாக்டர் சுப்ரா உடன் செல்கிறார்!

இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் நஜிப்! டாக்டர் சுப்ரா உடன் செல்கிறார்!

940
0
SHARE
Ad
najib-new delhi-republic day-24012018
நேற்றிரவு புதுடில்லி வந்தடைந்த பிரதமர் நஜிப்

புதுடில்லி – ஆசியான்- இந்தியா உடையிலான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதோடு, நாளை ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படும் இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காகவும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று புதன்கிழமை (ஜனவரி 24) இரவு புதுடில்லி வந்தடைந்தார்.

இந்த ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆசியான் நாடுகளின் அதிபர்களையும், பிரதமர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருக்கிறார்.

நேற்று புதுடில்லி வந்தடைந்த நஜிப்பின் அதிகாரபூர்வக் குழுவில் சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியமும் இடம் பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பிரதமராகப் பதவியேற்றது முதல், பிரதமர் நஜிப் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் நான்காவது அதிகாரபூர்வ வருகை இதுவாகும்.