Home நாடு பாசீர் கூடாங் மஇகா தலைவரின் இரு கார்கள் தீயில் சேதம்!

பாசீர் கூடாங் மஇகா தலைவரின் இரு கார்கள் தீயில் சேதம்!

1170
0
SHARE
Ad
MICmancarsfireபாசீர் கூடாங் – நேற்று புதன்கிழமை அதிகாலை, பாசீர் கூடாங் மஇகா தலைவர் ஆர்.சபாபதியின், இரு கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.
இது குறித்து சபாபதி கூறுகையில், தாமான் பாசீர் பூத்தேவில் உள்ள தனது வீட்டின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு கார்கள், ஜனவரி 24 (புதன்கிழமை) அதிகாலை 12.20 மணியளவில் தீடீரெனத் தீப்பற்றியதாகத் தெரிவித்திருக்கிறார்.
இச்சம்பவம் நடந்த போது, வீட்டில் தனது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் இருந்ததாகவும், தான் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் சபாபதி தெரிவித்திருக்கிறார்.
“வெளியே ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்த போது எனது மெர்செடிஸ் பென்ஸ் மற்றும் சிவப்பு நிற புரோட்டான் ஈஸ்வரா கார்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன.”

“நான் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரை உதவிக்கு அழைத்தேன்” என்று சபாபதி தெரிவித்திருக்கிறார்.

இச்சம்பவம் விபத்தா? அல்லது பிடிக்காதவர்கள் யாராவது பழிவாங்கும் விதமாகச் செய்த சம்பவமாக இருக்குமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, சபாபதி கருத்துக் கூற மறுத்திருக்கிறார்.

“இது பழிவாங்கலா என்பது எனக்குத் தெரியவில்லை. எனவே தெரியாமல் நான் கைகாட்டக் கூடாது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறேன். அவர்கள் இச்சம்பவத்திற்கான காரணத்தை அறியட்டும்” என்றும் சபாபதி தெரிவித்திருக்கிறார்.