“நாளை நமதே” என்பது எம்ஜிஆர் நடித்து 1975-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தின் தலைப்பாகும். 1972-ஆம் ஆண்டில் அதிமுக கட்சியை ஆரம்பித்த எம்ஜிஆர் தொடர்ந்து தனது படங்களுக்கு அரசியல் தொனியிலான தலைப்புகளை வைத்து வந்தார். 1977-ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், ஆட்சியைப் பிடிக்கப் போவது நாம்தான் என்ற தோரணையில் எம்ஜிஆர் வைத்த ‘நாளை நமதே’ என்ற படத்தின் தலைப்பு பின்னாளில் அதிமுக கட்சி மேடைகளில் அரசியல் முழக்கமாகவே, அந்தக் கட்சியின் சுலோகமாகவே மாறியது.
தற்போது மீண்டும் அந்தத் தலைப்பைக் கையிலெடுத்திருக்கிறார் கமல். அவர் பேசி வெளியிட்டிருக்கும் ‘நாளை நமதே’ என்ற தலைப்பிலான அந்த வரிகள் அடங்கிய காணொளியை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: