Home 13வது பொதுத் தேர்தல் பொதுத்தேர்தலில் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியை மக்கள் கூட்டணி கைப்பற்றும் – சிவநேசன் நம்பிக்கை

பொதுத்தேர்தலில் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியை மக்கள் கூட்டணி கைப்பற்றும் – சிவநேசன் நம்பிக்கை

614
0
SHARE
Ad

Sivanesan-sliderசிலிம் ரிவர், மார்ச் 27- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியை மக்கள் கூட்டணி கைப்பற்றும் என சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த முறை மக்கள் கூட்டணி தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத்தில்  பேராங் – சுங்கை ஆகிய சட்டமன்றங்களை வென்றது. இம்முறை தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றம் உட்பட அதன் மூன்று சட்டமன்றங்களை மக்கள் கூட்டணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சிவநேசன் தெரிவித்தார்.

இத்தொகுதியில் ம.சீ.ச கட்சிக்குள் நிலவும் உட்பூசலை மக்கள் அறிந்திருக்கும் அதே வேளையில் மக்கள் கூட்டணி மீது அவர்களின் ஆதரவு பெருகி வருவதால் நிச்சயமாக தஞ்சோங் மாலிம் தொகுதி மக்கள் கூட்டணியின் வசமாகும் என்று சிவநேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மசீச வேட்பாளர் ஓங் கா சுவான் இந்த தொகுதியில் 21,016  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.   அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் வேட்பாளர் முகமட் அஸ்மான் 15,594 வாக்குகள் பெற்றார்.

5,422 வாக்குகள் பெரும்பான்மையில் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற தேசிய முன்னணி சார்பாக இந்த முறை ம.சீ.ச சார்பில் மீண்டும் நிற்பது யார் என்ற இழுபறியும் நீடித்து வருகின்றது.

முன்னாள் தேசியத் தலைவர் ஓங் கா திங் சகோதரரான ஓங் கா சுவான் இந்த முறை நிறுத்தப்பட மாட்டார் என்ற ஆரூடங்களும் பரவி வருகின்றன.